வேலூர் மாவட்ட நிர்வாகம், மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.07.2024 அன்று வேலூர், சங்கரன்பாளையம், டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் சுமார் 20000 க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து முகாமிற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்முகாமில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடுநர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் வேலுர் மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. Landline: 0416 2290042 , PH: 9499055896, 8148727787.
Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /var/www/5b88c36c-15f6-4d65-a635-c88b671bd575/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply